Melbourneமெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

மெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

-

மெல்போர்னில் உள்ள பிரபல ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தை பெயிண்ட் அடித்து சிதைத்த நபர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இதனை சீரமைத்து சுத்தம் செய்ய கணிசமான தொகை செலவிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயில் நிலையம் அருகே உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை புதன்கிழமை இரவு சிலர் வண்ணப்பூச்சு பூசி சிதைத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பதாக மெட்ரோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மெல்போர்ன் நகரின் பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் மணிக்கூண்டு கோபுரத்தை மேலும் சேதமடையாத வகையில் பாதுகாப்பாகச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில்...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய விசா (துணைப்பிரிவு 491) அதிக வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2024-2025 நிதியாண்டில்,...

ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கான முக்கிய காரணங்கள் இதோ

லேபிளிங் தெளிவின்மை மற்றும் சில சேமிப்பு வழிமுறைகள் ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கு முக்கிய காரணம் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றில்...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...

சிட்னி ரயில் தாமதத்தால் வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவு

சிட்னியின் Southwest Metro பாதையின் கட்டுமானத் தாமதங்கள் ரயில் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படும் வரை வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவாகிறது என்று...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...