Melbourneமெல்போர்னில் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

மெல்போர்னில் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

-

மெல்போர்னில் வாகனம் திருடப்பட்ட வழக்கில் ஐந்து சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடிய சந்தேகத்தின் பேரில் குறித்த ஐந்து சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ட்ராய் வீதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும், வாகன சாரதியும் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரை திருடுவதற்கு முன், இளம்பெண்கள் குழு இ-ஸ்கூட்டர்களில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது.

கார் திருடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், நேற்றைய தினம் மாநிலத்தில் இளைஞர் குற்றங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் சட்டமா அதிபர் ஜாக்குலின் சைம்ஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

Dezi Freeman-ஐ தேட ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கை

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் Dezi Freeman-ஐ தேடும் பணி இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில்...

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மூடப்படும் மேலும் 4 தபால் நிலையங்கள்

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மேலும் நான்கு தபால் நிலையங்களை மூட ஆஸ்திரேலியா தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் உள்ளூர்வாசிகள் மிகவும் கோபமடைந்துள்ளனர் மற்றும் இதற்கு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...