மெல்போர்னின் பாயிண்ட் குக் பகுதியில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் நான்கு குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமானதுடன், புகை மூட்டப்பட்டு தீக்காயங்களுடன் குழந்தைகள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் கீழ் தளத்தில் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், வீட்டில் இருந்த அலாரம் காரணமாக அங்கிருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீட்டில் தீ எச்சரிக்கைக் கருவிகள் இல்லாதிருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.