Newsதேர்தல் பிரசாரத்தில் இறங்கிய டிரம்பின் பேத்தி!

தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய டிரம்பின் பேத்தி!

-

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வேட்பாளர்களாக ஜனநாயகக் கட்சிக்கு வேட்பாளராக ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சிக்கு டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளனர்.

டிரம்ப் கடந்த 13ஆம் திகதி பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் 20 வயது இளைஞனால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவரின் வலது காதில் காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில், மில்வாக்கி நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், டிரம்பின் பேத்தி 17 வயதான காய் மேடிசன் டிரம்ப்பை அவரது தந்தை ஜூனியர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்தார். தொடர்ந்து மேடையில் காய் மேடிசன் டிரம்ப் பேசியதாவது,

“என்னுடைய தாத்தாவும் சாதாரண தாத்தா போல்தான். எனது பெற்றோருக்கு தெரியாமல் மிட்டாய்களை வாங்கித் தருவார். எனது கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பார். அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு மனிதரால் மற்றொரு மனிதர் மீது இதுபோன்ற தாக்குதலை நிகழ்த்த முடிகிறது என்பதை நினைக்கும் போது கவலையளிக்கிறது.

எனது தாத்தாவை பலரும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து அவர் இன்று வரை நின்று கொண்டிருக்கிறார். அவர் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவர். அமெரிக்காவின் மேன்மைக்காக எனது தாத்தா ஒவ்வொரு நாளும் போராடுவார்.” என்று மேடையில் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...