Sydneyசிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து

-

சிட்னியின் கார்ல்டன் ரயில் நிலையத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டி ஒன்று ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததில் ஒரு சிறுமியும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 12.45 மணியளவில், இரண்டு சிறிய குழந்தைகளை ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ரயில் நடைமேடையில் இருந்து கவிழ்ந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.

இந்த விபத்தில் 4 வயது சிறுமியும் 40 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 வயது சிறுமியும், 39 வயதுடைய பெண்ணும் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர்களின் நிலை குறித்து அம்புலன்ஸ் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக T4 மற்றும் Illawarra பாதையில் Wolli Creek மற்றும் Hurstville இடையே ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரமத்திற்குள்ளான பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கு பேருந்து நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...