பங்களாதேஷின் அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கலவரம் அதிகரித்துள்ளதால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
போராட்டக்குழுவினர் பிரதமரின் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் பதவி விலகியதன் மூலம் பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என அந்நாட்டு இராணுவத் தளபதி வீகார் உஸ் சமன் அறிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி தலைநகரின் தெருக்களில் பேரணியாகச் சென்று பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பின்னர் அவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.