Newsகுடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் இனி யாருக்கும் வழங்கப்படாது!

குடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் இனி யாருக்கும் வழங்கப்படாது!

-

குடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் வேறு யாருக்கும் வழங்கப்படக் கூடாது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அசோசியேஷன் ஆஃப் சூப்பர்அனுவேஷன் ஃபண்ட்ஸ் ஆஃப் ஆஸ்திரேலியா (ஏஎஸ்எஃப்ஏ), விமன் இன் சூப்பர், மற்றும் சூப்பர் மெம்பர்ஸ் கவுன்சில் ஆகியவை குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவரின் ஓய்வூதிய பலன்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதாவது குடும்ப வன்முறையால் உயிரிழப்பவர்களின் மரண பலன்கள் தொடர்பான சட்டங்களை சீர்திருத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போதைய சட்டம் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களில் லாபம் ஈட்ட அனுமதித்துள்ளதாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக நடந்து வரும் நாடாளுமன்ற விசாரணையின் பரிந்துரைகளை பரிசீலனை செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அவை தீர்க்கப்படும் என பொது நிதி சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் நிதி துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டங்கள் சீர்திருத்தப்படும் என ஸ்டீபன் ஜோன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

மற்றுமொரு பிரபல நாட்டில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க...

நகரங்களை விட்டு வெளியேறும் அதிகளவான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களுக்குச் செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்று புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுமார் 40 சதவீத புறநகர் குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலியாவின் பிராந்தியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர், மேலும்...

உலகின் மிக உயரமான பெண்ணும், குட்டையான பெண்ணும் சந்திப்பு

2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக உலகின் மிக உயரமான பெண்ணும், உயரமான பெண்ணும் லண்டனில் சந்தித்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துருக்கியைச் சேர்ந்த ருமேசா...

நெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

காஸாவில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச...

நெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

காஸாவில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச...

அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோர் சமூகத்தால் ஆஸ்திரேலியர்களுக்கு எழும் சிக்கல்

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் சமூகம் மிக அதிகமாக இருப்பதாக 49 சதவீத ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் கோஹெஷன் பவுண்டேஷன் நடத்திய ஆய்வின்படி, இந்த நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை...