குயின்ஸ்லாந்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரத்தின்படி, கடந்த 10ம் தேதி வரை மொத்தம் 364 காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநில சுகாதார அமைச்சர் ஸ்டீவன் மைல்ஸ் கூறுகையில், ஒரு வாரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 28 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 15 வீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கும் மேலான குழந்தைகள் உட்பட எவருக்கும் இலவச காய்ச்சல் தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் உள்ளூர் மருத்துவர்களை சந்தித்து அப்பாயிண்ட்மெண்ட் எடுக்கவும் கூறப்பட்டுள்ளது.
இளம் குழந்தைகள் மற்றும் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்
காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த உடல்நல ஆபத்து மறைந்துவிடும் என்று சுகாதார அதிகாரிகள் கணித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் ஸ்டீவன் மைல்ஸ், மக்கள் கூடிய விரைவில் இலவச காய்ச்சல் தடுப்பூசிகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்.