அவுஸ்திரேலியா உட்பட 35 நாடுகளுக்கு விசா இன்றி இலங்கைக்கு செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை 06 மாத காலத்திற்கு அந்தந்த நாடுகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்த விசா சலுகை கிடைக்கும்.
மேலும், சீனா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் விசா இன்றி இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.