உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 57.80 கோடியாக அதிகரிப்பு

0
385

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகின்றனர். சீனாவின் வூகானில் 2019ல் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. அங்கிருந்து பல நாடுகளும் இந்த வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் பாதிப்பை சந்தித்தது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தாக்க துவங்கியது. பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் என்பது குறைந்துள்ளது. இருப்பினும் முடிவு பெறவில்லை. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ௫௭ கோடியே 80 லட்சத்து 15 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 77 லட்சம் 65 ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 09 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தமட்டில் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஜப்பானில் அதிகமாக பதிவாகி உள்ளது. ஜப்பானில் ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 1,80,226 பேரும், அமெரிக்காவில் 1,10,555 பேரும், தென்கொரியாவில் 1,00,182 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஅமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார் – கிம் ஜாங் அன்
Next articleபொன்னியின் செல்வன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு