ஆஸ்திரேலியாவில் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகின்றன.
அங்கு 44 பேருக்கு நோய் தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள். அவர்கள் 21 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நோயைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் குரங்கம்மை, கோவிட் நோயைவிடக் கடுமையானதல்ல என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போதைய சூழலில் ஆஸ்திரேலியாவில் எவரும் மாண்டதாகத் தகவல் இல்லை.