Newsவிபத்துக்குள்ளான இரு விமானங்கள் - நால்வர் காயம்

விபத்துக்குள்ளான இரு விமானங்கள் – நால்வர் காயம்

-

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியிலும் குயின்ஸ்லாந்தின் பிரிஸ்பேனிலும் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹண்டர் பள்ளத்தாக்கில் உள்ள செஸ்நாக் விமான நிலையத்தில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 12.15 மணியளவில் Cessnock விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், 50 வயதான விமானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தினால் விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரிஸ்பேன் அருகே கின் கின் பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கின் கிங்கில் உள்ள மோரன் குரூப் ரோடு அருகே தனியார் நிலத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருவர் மட்டுமே இருந்ததாக குயின்ஸ்லாந்து போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை மற்றும் 20 வயதுடைய ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் சன்ஷைன் கோஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் மற்றைய நபர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...