ஆஸ்திரேலியாவில் எரிசக்திக் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் மில்லியன்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்திச் சந்தை, இதுவரை காணாத அளவில் விலைகள் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டுக்கான ஒட்டுமொத்த எரிசக்திக் கட்டணங்கள் ஆண்டின் முதல் 3 மாதங்களோடு ஒப்பிடுகையில் 200 சதவீதத்திற்கு மேல் உயர்ந்ததாக அந்நாட்டின் எரிசக்திச் சந்தை நிறுவனம் தெரிவித்தது.
செயலிழந்து வரும் நிலக்கரி ஆலைகள், அதிகரிக்கும் எரிபொருள் விலைகள் ஆகியவை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.