Tasmaniaமோசமான வானிலையா அவதிப்படும் டாஸ்மேனியா மக்கள்

மோசமான வானிலையா அவதிப்படும் டாஸ்மேனியா மக்கள்

-

மோசமான வானிலை காரணமாக டாஸ்மேனியா மாநிலத்தில் சுமார் 30,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

மேலும் மாநிலத்தில் பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Derwent ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், Meadowbank முதல் Macquarie Plains வரையிலான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த காற்று மற்றும் மழை நிலை நீடிப்பதால் Meadowbank,Glenora, Bushy Park, Gretna, Macquarie Plains போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 570,000 மக்கள்தொகை கொண்ட டாஸ்மேனியா, தொடர்ந்து கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை நாளை காலை வரை மேற்கு மற்றும் வடக்கு கரையோரங்களை பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் டாஸ்மேனியா மக்கள் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படலாம் என்று அதன் இயக்குனர் மிக் லோவ் கூறினார்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...