Melbourneமெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

மெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

-

மெல்பேர்ண் பல்பொருள் அங்காடியில் கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றிரவு 8.45 மணியளவில், Seddon, Charles Street இல் உள்ள FoodWorks கடையின் ஊழியர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் இருவர் அச்சுறுத்தி கத்தியைக் காட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் சந்தேகநபர்கள் இருவரும் மதுபானம் வைக்கப்பட்டிருந்த இடத்தை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவர் ஊழியர் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு குற்றவாளிகளும் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளனர், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இரண்டு சிறார்கள் என நம்பப்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

ரஷ்யாவின் எண்ணெயை வாங்க வேண்டாம் என்று நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் அழுத்தம்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்குமாறு நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்துகிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு சீனா 50 முதல் 100 சதவீதம் வரை...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...