Newsவிக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

-

கடந்த வார இறுதியில் விக்டோரியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 40,000 பேர் இன்னும் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான காற்றின் வேகம் தணிந்துள்ளதால் வானிலை எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிவாரண சேவை குழுக்கள் இன்னும் பேரழிவுகளுக்கு பதிலளித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளை அவசர சேவைக் குழுவினர் பெற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் கட்டிட சேதம் தொடர்பானவையாகும்.

மின்சாரம் இல்லாத 6,700 பேருக்கு மீண்டும் மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக Powercor Australia தெரிவித்துள்ளது.

உடைந்த மின்கம்பிகள், மரங்கள் முறிந்து வீழ்ந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும், மேலதிக பணியாளர்களை நியமித்து திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று விக்டோரியாவில் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகளை சேதப்படுத்தியதாலும் 180,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

மோசமான காலநிலை காரணமாக 63 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று, பொது போக்குவரத்து மற்றும் சாலைகளும் பாதிக்கப்பட்டன. சாலையில் மரங்கள் விழுந்ததால் மெல்பேர்ண் வழியாக செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

நேற்று அதிகாலை 2.29 மணியளவில் மெல்பேர்ணில் உள்ள Wilson’s Promontory ஐ மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது, இது வார இறுதியில் பதிவு செய்யப்பட்ட வேகமானதாக நம்பப்படுகிறது.

மெல்பேர்ணில் இன்று வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும் நாளை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் மாணவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தனியார் பள்ளி மீது விசாரணை

மாணவர் துஷ்பிரயோகம் மற்றும் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விக்டோரியாவில் உள்ள தனியார் பள்ளியான Ballarat Grammar, பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை புதிய குடியிருப்பு மாணவர்களைச்...

வேலை இழக்கும் நூற்றுக்கணக்கான AGL Energy ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான AGL Energy, அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, நவீனமயமாக்கி, எரிசக்தி திட்டங்களுக்கு மாறத் தயாராகி வருகிறது. இதன்...

NSW ரயில்களில் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்ல அபராதம்

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வலையமைப்பில் (சிட்னி ரயில்கள், NSW ரயில் இணைப்பு, மெட்ரோ) மாற்றப்பட்ட மின்-பைக்குகளின் பயன்பாடு இன்று முதல் முற்றிலும் தடைசெய்யப்படும் . இந்தச்...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...