News1 பில்லியன் follower-களை கடந்து சாதனை படைத்த ரொனால்டோ

1 பில்லியன் follower-களை கடந்து சாதனை படைத்த ரொனால்டோ

-

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்ந்து 1 பில்லியன் பின்தொடர்பவர்களைப் (followers) பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களான Instagram, Facebook, X மற்றும் YouTube ஆகியவற்றில் மொத்தமாக இவர், 1 பில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார்.

இந்தச் சாதனை மூலம் ரொனால்டோ, சமூக ஊடக வலைத்தளங்களில் 1 பில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள ரொனால்டோ,

“உலகின் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துள்ளதாகக் கருதுகிறேன். நான் எப்போதும் எனது குடும்பத்திற்காகவும் உங்களுக்காகவும் தான் விளையாடி உள்ளேன். என்னை நம்பி ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி” என இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...