Newsகாசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 44 பேர் பலி

காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

-

லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது லெபனான் 150க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவு தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி வழங்கும் விதமாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை முன்னெடுத்தது.

இந்த தாக்குதலில் 3 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக நாட்டின் சுகாதார அமைச்சர் Firas Abiad தெரிவித்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த 68 பேரில் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், லெபனான் மற்றும் காசா மீது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, லெபனான் தலைநகர் Beirut மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படை தளபதி Ibrahim Aqil கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள்...

பெரியம்மை நோய்க்கு எதிராக ‘MPOX’ எனும் தடுப்பூசி

பெரியம்மை நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இளம் வயதினர் இடையே மெல்ல பரவிவரும் நிலையில் அதற்கு எதிரான 'MPOX' எனும் தடுப்பூசியை 12 வயது முதல்...

200,000 ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Shingles தடுப்பூசி

நோய்த்தடுப்புத் திட்டத்தின் விரிவாக்கத்தில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள ஆஸ்திரேலியர்கள் Shingles தடுப்பூசியை இலவசமாகப் பெறுவார்கள். இந்த இலவச தடுப்பூசி திட்டம் இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார நிலைமைகள்...

NSW-வில் அறிமுகமாகும் “இலவச வாடகை சொத்து ஒப்பீட்டு கருவி”

நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாடகைதாரர்கள் இப்போது மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இலவச வாடகை ஒப்பீட்டு கருவியைப் பயன்படுத்தி, தாங்கள் செலுத்தக் கேட்கப்படும் வாடகை நியாயமானதா...

NSW-வில் அறிமுகமாகும் “இலவச வாடகை சொத்து ஒப்பீட்டு கருவி”

நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாடகைதாரர்கள் இப்போது மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இலவச வாடகை ஒப்பீட்டு கருவியைப் பயன்படுத்தி, தாங்கள் செலுத்தக் கேட்கப்படும் வாடகை நியாயமானதா...

ஆஸ்திரேலியாவில் ரத்த தானம் செய்பவர்களுக்கு பற்றாக்குறை – நெருக்கடியில் நோயாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்பவர்களின் பற்றாக்குறை காரணமாக Stem Cell பொருத்தம் தேவைப்பட்டால் “வாழ்க்கை அல்லது இறப்பு” என்ற நிலையை எதிர்கொள்ள நேரிடும்...