ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஜனவரி 1 ஆம் திகதி குறித்த பகுதியை அழித்த பயங்கரமான நிலநடுக்கத்தில் இருந்து மீண்டு வரும் வாஜிமா மற்றும் சுஸு நகரங்கள், சனிக்கிழமையன்று தொடங்கி உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மதியம் 03:00 GMT வரை நீடித்த அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பல ஆறுகள் பெருக்கெடுத்தமையினால், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
திங்களன்று (23) சுமார் 4,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சனிக்கிழமையன்று இஷிகாவாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
திங்கள்கிழமை (23) நண்பகல் வரை தொடர் மழை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஜனவரி மாதம் 7.5 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து இப்பகுதி இன்னும் மீண்டு வருகிறது.
நிலநடுக்கத்தால் குறைந்தது 236 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.