Newsஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும்...

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

-

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல்.

காஸாவின் பின்லேடன் என அறியப்படும் சின்வார் ஆகஸ்டு மாதத்தில் தான் ஹமாஸ் படைகளின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். ஆனால் தற்போது இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஊடகங்களே, சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளன. காஸா பகுதியில் மறைந்திருந்த சின்வார், இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகிறது.

ஆனால் எங்கே எப்போது அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே விசாரணை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், சின்வார் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் முன்னெடுக்கப்பட்ட அக்டோபர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சின்வார் என்றே இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதனாலையே, அவர்களின் முதல் இலக்கு சின்வார் என கூறி வந்தனர்.

இருப்பினும் கடந்த 11 மாதங்களில் சின்வார் பல கட்டங்களில் இஸ்ரேல் இலக்கில் இருந்து தப்பி வந்ததாகவே கூறப்படுகிறது. மட்டுமின்றி, அமெரிக்க ராணுவமும் கடந்த மாதம் சின்வார் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தது.

சுமார் 22 ஆண்டு காலம் பயங்கரவாதம், கொலை மற்றும் கடத்தல் திட்டங்களுக்காக இஸ்ரேல் சிறையில் தண்டனை அனுபவித்தவர் சின்வார். தற்போது நடக்கும் போரானது சின்வார் கொல்லப்படும் வரையில் நீடிக்கும் என்றே இஸ்ரேல் ராணுவ தளபதி தொடர்ந்து கூறி வருகிறார்.

Latest news

NSW செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலைநிறுத்தம்!

நியூ சவுத் வேல்ஸில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் 15 சதவீத ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், திட்டமிடப்பட்ட சில அறுவை சிகிச்சைகள் நாளை ஒத்திவைக்கப்படும். செவிலியர்கள் மற்றும்...

வரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஜனவரி 1...

விலை உயர்விலிருந்து ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டம்

சூப்பர் மார்க்கெட் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். Woolworths மற்றும் Coles நிறுவனங்களின் தள்ளுபடி...

அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி வழங்குவதை நிராகரித்த விக்டோரியா அரசு

அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை 20ல் இருந்து 22.5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முன்வைத்த பரிந்துரையை விக்டோரியா மாநில அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா...