Perthபெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

பெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

-

பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு ஜோடி off-leash நாய்களால் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை காலை John Moloney பூங்காவில் இரண்டு பெரிய நாய்கள் தீடீரென வந்து தங்களை தாக்கியதாக சம்பவத்தில் காயமடைந்த நபரான ஹெலன் மாடோ கூறினார்.

ஒரு நாய் ஹெலன் மாடோவின் காலையும், மற்றொரு நாய் அவரின் இடுப்பைப் பிடித்து தாக்க ஆரம்பித்துள்ளன. மாடோ உதவிக்காக கத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார் சாரதி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

குறித்த நாய்கள் காரை நிறுத்தி மாடோவை காப்பாற்ற முயன்ற போது தன் காரையும் தாக்க ஆரம்புத்ததாக கார் சாரதி கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் எங்கு சென்றன என்று தெரியவில்லை, என்று மாட்டோ கூறினார்.

20 வயதுடைய மற்றொரு பெண்ணும் பல நாய் கடிகளுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சைக்காக Joondalup Health Campus-க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாய்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று Wanneroo நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததோடு, விசாரணைகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.

Latest news

‘Ham Sandwich’ விளம்பரத்தை தடை செய்துள்ள ஆஸ்திரேலிய மாநிலம்

தெற்கு ஆஸ்திரேலியா, குழந்தைகளை ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து பாதுகாக்க, junk food விளம்பரங்களுக்கு புதிய தடை விதித்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் தற்போதைய உணவு சந்தைப்படுத்தல் சட்டங்கள் பயனற்றவை மற்றும்...

200 மில்லியன் டாலர்களுக்கு மேல் இழப்பீடு வழங்க உள்ள Uber நிறுவனம்

5 வருட வழக்குக்குப் பிறகு, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இழப்பீடு வழங்க Uber நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, Uber நிறுவனத்திற்கு...

இறக்குமதி தடைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்கள் பறிமுதல்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தடை செய்யப்பட்டதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்களை பறிமுதல் செய்துள்ளதாக சிகிச்சை பொருட்கள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF)...

பாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன்...

பாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன்...

இனிப்பு பானங்களுக்கு சர்க்கரை வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை

அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் Type 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சோடாக்கள், cordials, energy drinks மற்றும் பழச்சாறுகள் மீது புதிய வரி...