Melbourne7 மாதங்களாக காணாமல் போன மெல்பேர்ண் தாயாரின் உடலை தேடும் புதிய...

7 மாதங்களாக காணாமல் போன மெல்பேர்ண் தாயாரின் உடலை தேடும் புதிய பணிகள்

-

7 மாதங்களாக காணாமல் போன சமந்தா மர்பியின் உடலை தேடும் பணி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி முதல் காணாமல் போன இப்பெண்ணை தேடும் பணி மீண்டும் பல்லாரட் பகுதியில் ஆரம்பித்துள்ளதாகவும், காணாமல் போனோர் படையைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் உட்பட பல நிபுணர்கள் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மத்திய பொலிஸாருடன் இணைந்து புதிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் காணாமல் போன சமந்தா மர்பி, கொலை செய்யப்பட்ட நிலையில், 22 வயதான பேட்ரிக் ஸ்டீவன்சன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன, ஆனால் அவரது உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சந்தேகநபர் எதிர்வரும் நவம்பர் மாதம் மீண்டும் பல்லாரட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

சமந்தா மர்பியின் கடைசி ஆதாரம் மே மாதம், பல்லாரட் அருகே விவசாய நிலத்தில் அணையின் ஓரத்தில் மர்பியின் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட கைத்தொலைபேசியை தடயவியல் வைத்தியருக்கு அனுப்பி வைத்தபோது அது அவரின் சொந்த தொலைபேசி எனத் தெரியவந்துள்ளது.

தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்றும், இது தொடர்பான தகவல் தெரிந்தால் 1800 333 000 என்ற எண்ணில் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...