Newsகாதலியைக் கொன்று வீட்டில் புதைத்த காதலன்!

காதலியைக் கொன்று வீட்டில் புதைத்த காதலன்!

-

தனது காதலியைக் கொலை செய்து வீட்டில் புதைத்த காதலனை 16 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென் கொரியாவில் ஆண் ஒருவர் தனது காதலியைக் கொன்று, அவரது உடலை தனது வீட்டிலேயே புதைத்து வைத்திருந்தமை 16 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபருக்கு அப்போது 34 வயது என்பதுடன், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதெனவும் தெரியவந்துள்ளது.

தற்போது 50 வயதாகும் சந்தேக நபர், தென்கொரியாவிலுள்ள ஜியோஜியில் உள்ள வாடகைக் குடியிருப்பில் தனது காதலியுடனான வாக்குவாதத்தில் அந்த பெண்ணை தலையில் தாக்கி கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை சூட்கேஸ{க்குள் வைத்து கட்டிடத்தின் மேற்கூரையை ஒட்டிய வெளிப்புற பால்கனியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் குறித்த பகுதியை செங்கற்களால் அடைத்து, அதன் மீது சிமெண்டை பூசி மறைத்துள்ளார்.

பொலிஸ் விசாரணையின் படி, சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் எட்டு வருடங்கள் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதே குடியிருப்புப் பிரிவில் தொடர்ந்து வசித்து வந்ததுடன், 2016இல் வெளியேறியுள்ளார்.

சந்தேக நபர் வெளியேறிய பிறகு, வேறு எந்த குத்தகைதாரர்களும் குறித்த குடியிருப்பில் வசிக்கவில்லை என்பதுடன், வீட்டின் உரிமையாளர் அதை சேமிப்புப் பகுதியாகப் பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டிடத்தின் உரிமையாளர் தண்ணீர் கசிவைத் தடுக்க குறித்த பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது சடலம் அடங்கிய சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினருடன் அதிகமாக தொடர்பில்லாமல் இருந்தது தெரியவந்தது, அதாவது 2008இல் அவர் இறந்து மூன்று ஆண்டுகள் வரை காணாமல் போனவர் குறித்த முறைப்பாடு எதுவும் அவர்களால் தாக்கல் செய்யப்படவில்லை. 2011ஆம் ஆண்டிலேயே காணாமல் போன பெண் குறித்த முறைப்பாட்டை பெண்ணின் பெற்றோர் பதிவுவசெய்துள்ளனர்.

அதன் பின்னர் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் தம்பதியினர் பிரிந்ததாகக் கூறினார். சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்; வழக்கை மீண்டும் விசாரித்தனர். 2011இல் பெண் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் மூலம், தலையில் பலத்த காயத்தால் அந்தப் பெண் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

தெற்கு ஜியோங்சாங் மாகாணத்தில் உள்ள சந்தேகநபரின் இல்லத்தில் கொலைக் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைதுசெய்தனர். விசாரணையில் சந்தேக நபர் தனது காதலியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன்னர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சந்தேகநபர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், கைதுசெய்யப்படும்போதும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

பெற்றோரை கொலை செய்யுமாறு 14 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய AI!

டெக்சாஸை சேர்ந்த தாய் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்ட...

Centrelink மானியம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த கிறிஸ்துமஸில் Centrelink நன்மைகளைப் பெற ஆஸ்திரேலியர்கள் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் டிசம்பர் 25, 26 மற்றும் ஜனவரி...

398 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு ஏலம் போன முட்டை

கோள வடிவ முட்டை ஒன்று 398 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு ஏலம் போனதாக பிரிட்டனில் இருந்து செய்தி வந்துள்ளது. ஒரு கோள முட்டையை கண்டுபிடிப்பதற்கான நிகழ்தகவு பில்லியன் முட்டைகளில்...

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தையில் வந்துள்ள ஒரு பிரபலமான சிற்றுண்டி

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான தின்பண்டங்களில் ஒன்று மீண்டும் சந்தையில் சேர்க்கப்பட்டுள்ளது. Allen’s தயாரிப்பு வரிசையின் Peaches மற்றும் Cream தயாரிப்புகள் தனித்தனியாக மீண்டும்...

398 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு ஏலம் போன முட்டை

கோள வடிவ முட்டை ஒன்று 398 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு ஏலம் போனதாக பிரிட்டனில் இருந்து செய்தி வந்துள்ளது. ஒரு கோள முட்டையை கண்டுபிடிப்பதற்கான நிகழ்தகவு பில்லியன் முட்டைகளில்...

Vanuatu தலைநகரில் வலுவான நிலநடுக்கம் – அவுஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலா?

Vanuatuவின் தலைநகரான போர்ட் விலா கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும்...