மெல்பேர்ணில் இன்று காலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமின்றி உயிர் தப்பியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்திற்கு குற்றத்தடுப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மெல்பேர்ணின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த வீட்டில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும், இது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.