அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொலைபேசிகளுக்கு 4.9 மில்லியன் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சீன பிரஜை காலாவதியான வீசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதான சீனப் பிரஜை கடந்த செவ்வாய்கிழமை சைபர் கிரைம் துப்பறியும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், காவல்துறையின் தேடுதல் வாரண்ட் உள்ளது.
இந்த மோசடி குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 1200 சிம் கார்டுகளை அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் குறுஞ்செய்தி ஊடாக மக்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.