Melbourneமெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

-

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, மெல்பேர்ணில் உள்ள வணிக ஸ்தலங்கள் மற்றும் தனியார் இடங்களிலிருந்து உணவுக் கழிவுகளை அகற்றும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய திட்டத்தின் கீழ், டிக்ரேவ்ஸ் ஸ்ட்ரீட் மறுசுழற்சி மையம் தேவைப்படுபவர்களுக்கு ஆர்கானிக் தொட்டிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றிய கூடுதல் தகவல்களை மெல்பேர்ண் நகரத்தின் இணையதளத்தில் அல்லது 03 9658 9658 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களது கழிவுகளை தனிப்பட்ட முறையில் சேகரிக்க குப்பை சேகரிப்பாளரின் உதவி தேவைப்படுமாயின் அதற்கான வசதிகளையும் செய்து தர முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உங்கள் தினசரி உணவுக்குப் பிறகு அதிகப்படியான உணவு இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு தரமான உணவை வழங்குவதற்கான வசதிகளையும் இது வழங்கும்.

melbourne.vic.gov.au என்ற இணையத்தளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் பெற முடியும் மேலும் மெல்பேர்ண் மக்கள் இங்கு வீணாகும் உணவு மற்றும் உபரி உணவுகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...