Cinemaமீண்டும் ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா ஜெயம் ரவி?

மீண்டும் ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா ஜெயம் ரவி?

-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காலத்தில் இருந்தே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜெயம் ரவி சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் இளம் நாயகனாக மாறிய பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர், சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார்.

திருமணத்திற்கு பின்னர் திரையுலகமே பார்த்து பொறாமை படும் வகையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மிகவும் அன்பான கணவன் – மனைவியாக வாழ்ந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். கடந்த ஆண்டு வரை இருவருமே ஒற்றுமையான ஜோடிகளாக இருந்த நிலையில், திடீரென இவர்கள் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது விவாகரத்து வரை வந்துள்ளது.

ஆர்த்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி… அவர் மீதான கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தன்னுடைய விவாகரத்தை உறுதி செய்தார். மேலும் இந்த முடிவு குடும்ப நலன் கருதி எடுத்திருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஆனால் ஆர்த்தி தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குடும்ப சூழ்நிலைக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும், தனிப்பட்ட முடிவு என்றும் ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார். மேலும் ரவியின் இந்த முடிவால் தானும் தன்னுடைய குழந்தைகளும் எதுவும் தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதாகவும், தன்னுடைய கணவரை சந்தித்து பேச பலமுறை முயற்சி செய்தும், தான் தடுக்க பட்டதாக ஆர்த்தி இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதே போல் மன வேதனையில் இருந்தாலும், பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே விரும்புவதாகவும்… ஆனால் தன்னுடைய நடத்தை மீது களங்கம் கற்பிக்கும் வகையில் வெளியாகும் தகவல்களை மறுப்பது தன்னுடைய கடமையாகும் என்றும், இது போன்ற தகவல்கள் தன்னுடைய குழந்தைகளை காயப்படுத்துவதை தன்னால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என கூறி இருந்த ஆர்த்தி, இந்த கடுமையான காலகட்டத்தில் தன்னுடைய குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என உருக்கமாக கூறி இருந்தார்.

ஆர்த்தியின், இந்த அறிக்கையை தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் பாடகி கெனிஷா இடையே தொடர்பு இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதுபோன்ற தகவல்களை பிரதர் பட விழாவில் கலந்து கொண்ட போது ஜெயம் ரவி மறுத்தார். கெனிஷா தரப்பில் இருந்தும், இது ஆதாரமற்ற தகவல் என்றும், ஒருவரின் குடும்ப வாழ்க்கையில் என்னை இழுக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

மேலும் விவாகரத்து சர்ச்சை பற்றி, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி ஆர்த்தியால் வேலைக்காரர்கள் முன்பு அசிங்கப்படுத்த பட்டதாகவும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தன்னுடைய கை செலவுக்கு கூட ஆர்த்தியிடம் கையேந்தும் நிலையில்தான் வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார். மேலும் தனக்கென ஒரு பேங்க் பாஸ் புக் கூட இல்லை. நான் சம்பாதித்த பணம் அனைத்தும், ஆர்த்தி மற்றும் மாமியாரிடம் தான் உள்ளது என கூறினார். அதே போல் ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக நீலாங்கரை காவல்நிலையத்தில் ஜெயம் ரவி கொடுத்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில்… தற்போது ஆர்த்தி சமாதான கொடி காட்டும் விதத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆர்த்தியின் இந்த அறிக்கையில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். நான் தனிப்பட்ட பேச்சுவாந்தாரிக்கு தயார் என்றேன். ஆனால் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்பது போன்றும். சட்ட ரீதியாக தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஆர்த்தி கூறியுள்ளார்.

இந்த அறிக்கையில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு, என் மௌனம் வெளிப்பாடாக இருப்பது… என்னுடைய பலவீனமோ, அல்ல குற்ற உணர்ச்சியோ அல்ல. என்னுடைய சுயமரியாதையை கடைபிடிக்கிறேன். உண்மையை மறைக்க விரும்பி, என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மெளனமாக இருக்கிறேன். அதே நேரம் நீதித் துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஒருமனதாக விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணத்தின் புனிதத்தன்மையை நான் ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன். கடவுளும் என்னை ஆசீர்வதிப்பார் என நம்புகிறேன் என ஆர்த்தி எமோஷ்னலாக பேசியுள்ளார். ஆர்த்தி மீண்டும் ஜெயம் ரவிக்கு சமாதான கொடி காட்டியுள்ளதால், பிள்ளைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest news

சந்தையில் இருந்து நீக்கப்பட்டபிரபலமான Sunscreen தயாரிப்பு

பிரபலமான Sunscreen தயாரிப்பு ஆஸ்திரேலிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரபலமான Sunscreen பிராண்டான Ultra Violette, அதன் Lean Screen SPF 50+ Mattifying...

பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Noojee Trestle பாலம்

விக்டோரியாவின் மிக உயரமான மரப் பாலமான Gippsland-இல் உள்ள Noojee Trestle பாலம், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் பாதுகாப்புப் பழுதுபார்ப்புக்காக கடந்த மே மாதம்...

ரணில் ஏன் ஜாமீனை இழந்தார்?

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உயர்...

அழகான சமையல் பாத்திரங்களை வாங்குவது உடல்நலத்திற்கு ஆபத்தானது!

வீட்டு சமையலறை பயன்பாட்டிற்கான சமையல் உபகரணங்களை வாங்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான பொருளாக சிலிகானை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெர்மனியின்...

பெர்த் மழைநீர் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய் கண்டுபிடிக்கப்பட்டார்!

பெர்த் மழைநீர் வடிகாலில் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட தனது பிறந்த மகனின் மரணத்தை மறைத்ததாக ஒரு தாய் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து...

ட்ரம்பின் Alligator Alcatraz தடுப்பு மையத்தை அகற்ற நீதிபதி உத்தரவு.

புளோரிடாவில் உள்ள "Alligator Alcatraz" இல் புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஒரு கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் Florida Everglades-இல் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு...