இந்த வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் மழை மற்றும் புயல் நிலைகள் ஏற்படக்கூடும் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவில் கனமழை மற்றும் புயல் நிலைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் சிட்னியில் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
மெல்போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதுடன் மாலையில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்பெர்ரா, ஹோபார்ட், அடிலெய்டு, டார்வின் மற்றும் பெர்த் நகரங்களிலும் இந்த வார இறுதியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.