மெல்பேர்ண் வணிக வளாகத்தில் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் இருவர் முன்னைய வாள்வெட்டுச் சம்பவங்களுக்காக பிணையில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மெல்பேர்ணில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் இந்த வன்முறை வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளதுடன், இரவு உணவருந்திக் கொண்டிருந்த ஒரு குழுவினருக்கு அருகில் இந்த மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் வாரன்வூட்டில் 14 வயது சிறுமியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சிறார்களில் இருவர் பிணையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய போலீசார் காயமடைந்த 3 சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், 13 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று சிறுவர்களில் இருவர் விளக்கமறியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் கூறுகையில், மாநிலத்தில் இளைஞர் குற்றவாளிகள் மீது காவல்துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது.
வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்ற வர்த்தக நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.