Uncategorizedகமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தகுதியானவர் – மருத்துவர் வெளியிட்ட அறிக்கை

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தகுதியானவர் – மருத்துவர் வெளியிட்ட அறிக்கை

-

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

கமலா ஹரிஸின் வைத்தியர் ஜோசுவா சிம்மன்ஸ் குறித்த அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,

கமலா ஹரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார்.

நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். புகையிலை மற்றும் மது பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.

மேலும், ஹரிஸ் கிட்டப்பார்வை கொண்டவர். இதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து உள்ளார். அவருக்கு 3 வயதாக இருந்தபோது வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள்...

“உயிருள்ள எதையும் TV-யில் காட்டக் கூடாது“ – தாலிபான் அதிரடி உத்தரவு

2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது....

காதலிக்கு $4.3 மில்லியன் வீட்டை வாங்கிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக 4.3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியர்கள்...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

இந்தியா – கனடா தூதரக உறவில் விரிசல் – தூதுவர்கள் வெளியேற்றம்

கனடாவில் உள்ள இந்திய தூதுவர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான்...