வேலை தேடுபவர்கள் விரைவாக வேலையை விட்டு வெளியேறும் நகரங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Corporate Real Estate இணையதளமான Instant Offices இந்த ஆய்வை நடத்தி, மக்கள் தங்கள் வேலையை வேகமாக விட்டுச் செல்லும் நகரமாக லண்டனை பெயரிட்டனர்.
அந்த தரவரிசையில் மெல்பேர்ண் நகரம் 2வது இடத்தில் உள்ளது.
அறிக்கைகளின்படி, மெல்பேர்ணில் வசிப்பவர்களில் ஒரு மாதத்திற்கு சுமார் 1040 பேர் தங்கள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்.
சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், நியூயார்க் நகரம் 4வது இடத்திலும் உள்ளன.
வேலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சிட்னி 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதன்படி, இரண்டு அவுஸ்திரேலிய நகரங்கள் இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்
Berlin, Los Angeles, Amsterdam, Montreal ஆகியவை அந்த தரவரிசையில் உள்ள முக்கிய நகரங்களில் அடங்கும்.