உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது.
பல்வேறு நாடுகளின் அரசுகள் சொந்தமாக நிதிகளை உருவாக்கி, அவற்றை பங்குகள், பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருவாய் ஈட்டும். இந்த நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் குளோபல் எஸ்.டபிள்யு.எப். சார்பாக உலகிலேயே பணக்கார நகரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு மாத நிலவரப்படி, அபு தாபி அரசு 1.7 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டு நிதிகளைப் பெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அபுதாபி அரசைப் பொருத்தவரை, எமிரேட்ஸ் முதலீட்டு ஆணைய நிதி மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணைய நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியமைப்புகள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக, அபு தாபி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.