ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய உணவு நிவாரண சமையலறை மெல்பேர்ணில் திறக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகவும் நம்பகமான இரண்டு தொண்டு நிறுவனங்களான SecondBite மற்றும் FareShare ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய உணவு நிவாரண சமையலறையாக கருதப்படுகிறது.
தேவைப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கும் இலக்குடன் இது உருவாக்கப்பட்டது.
SecondBite-ன் இணை நிறுவனர் சிமோன் கார்சன் கூறுகையில், ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் தொடர்ந்து தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடுகின்றனர்.
புதிய சமையலறை திறப்பு, உணவுப் பாதுகாப்பிற்கான முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதோடு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரந்த இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
உணவுத் தேவையிலுள்ள அவுஸ்திரேலியர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இது மேற்கொள்ளப்படுவதுடன், எதிர்காலத்தில் இந்தச் சலுகைகள் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக விக்டோரியாவில் உள்ள 30 மனிதாபிமான முகவர் நிலையங்கள் மூலம் இந்த உணவு விநியோக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.