சிட்னியின் ஜார்ஜஸ் ஆற்றில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 10.15 மணியளவில் இவர்கள் மூவரும் நீரில் விழுந்ததையடுத்து, பொலிசார் உள்ளிட்ட நிவாரண சேவைகள் மூவரையும் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் ஜோர்ஜஸ் ஆற்றில் தேடுதல் நடவடிக்கை சோகத்தில் முடிவடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடத்தில் இந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் தண்ணீரில் விழுந்தனர், அந்த இடத்தில் ஒரு குழுவினர் தண்ணீரில் குதித்து தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தேடினர்.
குறித்த பெண் முதலில் கரைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் அவசர சேவை தன்னார்வ தொண்டர்களும் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் மற்றும் குழந்தைகளின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.