உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல வினோதங்கள் புதைந்துள்ளன.
அந்த ஆச்சரியங்கள் நிறைந்த தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. சுமத்ரா, ஜாவா, சுலவேசி என 17 ஆயிரம் தீவுக் கூட்டங்கள் இணைந்து இந்தோனேசியா என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 30 கோடிப் பேர் இந்த தீவுக் கூட்டங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் டோராஜன் என்ற இனக்குழுவும் ஒன்று.
இந்த சமூகத்தில் உயிரிழந்தவர்களை பாதுகாத்து அவர்களுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உடல் இறந்தாலும் உள்ளிருக்கும் ஆன்மா உயிரிழக்காது என்று இந்த டோராஜன் சமூகத்தின் கருதுகிறார்கள். பார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இந்த சமூகத்தினர் பாதுகாக்கின்றனர்.
அப்படி பாதுகாக்கும் உடல்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிறார்கள். இப்படி இறந்த உடல்களை பாதுகாத்து வைத்தால் அதிஷ்டம் கை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
டோராஜன் மக்கள், சிறு வயதிலிருந்தே, மரணத்தை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வது, அதைச் சமாளிப்பது மற்றும் அந்த சோகத்தை எப்படி சமாளிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
இந்தோனேசியா தீவை பொருத்தளவில் டோராஜன் மக்களின் இந்த பண்பாடு அங்கு காணப்படும் ஆயிரக்கணக்கான வினோதங்களில் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.