Newsஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன்...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு

-

உலக பணக்காரருக்கும் Tesla, SpaceX, X உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க் படாதபாடு படுகிறார். டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

டிரம்புக்கு குறைந்த வாக்கு இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு ஜபிஏசிஸ என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் .

இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டொலர்கள் சுமார் 8 கோடி ரூபா பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.

அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Latest news

செல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸின் Hunter பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள...

இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

கடந்த 19 ஆம் திகதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல்...

விக்டோரியாவில் வீட்டுக் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஆஸ்திரேலியர்களின் அடமான மன அழுத்தம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிக்கைகளின்படி, வீட்டுக் கடன் பெற்ற ஆஸ்திரேலியர்களில் 28.3 சதவீதம் பேர் தற்போது அடமான...

இன்னும் முன்வராத $8 மில்லியன் வெற்றியாளர்

Oz Lotto லாட்டரி டிராவில் $8 மில்லியன் வென்றவர் தனது வெற்றியைப் பெற இன்னும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய வெற்றியாளர் மெல்பேர்ணில் வசிப்பவர் மற்றும் அக்டோபர்...

இன்னும் முன்வராத $8 மில்லியன் வெற்றியாளர்

Oz Lotto லாட்டரி டிராவில் $8 மில்லியன் வென்றவர் தனது வெற்றியைப் பெற இன்னும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய வெற்றியாளர் மெல்பேர்ணில் வசிப்பவர் மற்றும் அக்டோபர்...

3 நிமிடங்கள் மட்டுமே முத்தமிட வேண்டும் – சர்வதேச விமான நிலையத்தின் அறிவிப்பு

நியூசிலாந்தின் டுனெடின் விமான நிலையத்தில் பிக் அப் மற்றும் டிராப் பகுதிகளில் முத்தமிடும் நேரத்தை மூன்று நிமிடங்கள் மட்டுமே கொண்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் இது தொடர்பான...