சமீபத்திய சந்தை தரவுகளின்படி ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் Halloween கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு சில்லறை விற்பனையாளர்களிடையே Halloween பொருட்களின் விற்பனை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
அக்டோபர் 31ம் திகதி Halloween கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காயின் விற்பனை இந்த நாட்களில் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியர்களில் 38 சதவீதம் பேர் Halloween கொண்டாட்டங்களுக்காக மிட்டாய்களை வாங்குவதாகவும், 37 சதவீதம் பேர் ஆடைகளை வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 32 சதவீத ஆஸ்திரேலியர்கள் Halloween கருப்பொருள் கொண்ட வீட்டு அலங்காரங்களில் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.
ஒரு பங்கேற்பாளர் Halloween-க்கு குறைந்தபட்சம் $93 செலவழிக்க எதிர்பார்க்கிறார் என்றும் 35-59 வயதிற்குட்பட்டவர்கள் ஹாலோவீன் விழாக்களில் முன்னணியில் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆஸ்திரேலியர்கள் பயமுறுத்தும் Halloween நிகழ்வுகளில் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.