சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
காலை 11.45 மணியளவில் ஓக்டேல் அருகே பெலிம்ப்லா பூங்காவிற்கு அருகில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடங்களுக்குச் சென்றுள்ளதுடன், விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விசாரணை நடத்தி வருகிறது
விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து அப்பகுதியில் காட்டுத் தீ பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தீயுடன் அந்தந்த பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.