சீன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் BYD, இந்த ஆண்டு காலாண்டு வருவாய் உயர்ந்து, எலோன் மஸ்க்கின் Tesla-வை முதன்முறையாக பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அதன் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 11.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
BYD வலுவான விற்பனை வேகத்தை பராமரித்து, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் 11.6 பில்லியன் யுவான் ($1.63 பில்லியன்) ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு 24 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜூலை முதல் செப்டம்பர் வரை உலகளவில் EV விற்பனையில் Tesla இன்னும் BYD ஐ விட அதிகமாக உள்ளது.