அடுத்த சில நாட்களில் அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Fraser Coast, Wide Bay மற்றும் Burnett ஆகிய பகுதிகளில் புயல் நிலைகள் ஏற்படக்கூடும் எனவும் அதன் பின்னர் அந்த வானிலை வடக்கு நோக்கி நகரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Alice Springs உட்பட வடக்குப் பகுதிகளில் சில நாட்களுக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அடிலெய்டில் இன்று வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்.
தெற்கு அவுஸ்திரேலியாவின் கிழக்கு ஐர் தீபகற்பம், யோர்க் தீபகற்பம், ரிவர்லேண்ட் மற்றும் மேரிலாந்து உள்ளிட்ட சில பகுதிகள் காட்டுத்தீ அபாயத்தில் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பமான காலநிலை நாளை சிட்னி நோக்கி நகரும் என்றும் திங்கட்கிழமை முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென்கிழக்கு நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.