ஏப்ரல் 13, 2024 அன்று போண்டி சந்திப்பில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை தடுத்து நிறுத்திய சிட்னி காவல்துறை அதிகாரி “ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியன்” விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி நடந்த இந்த கொடூரமான சம்பவத்தில் பெரும் சோகத்தை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர் Amy Scott இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தை பொருட்படுத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டர் Amy Scott, கொலையாளியை விரைவில் தடுத்து நிறுத்த செயல்பட்டதால் பல கொலைகள் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருடன், முன்னாள் கிரிக்கெட் வீரரும், சமூக சேவகியுமான Keth Koschel மற்றும் இளைஞர் வழிகாட்டியான Daniel Principe ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.