Newsஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - 9 பேர் பலி

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – 9 பேர் பலி

-

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி – லாகி எரிமலை கடந்த 3ம் திகதி வெடித்துள்ளது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது.

எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளது. 4 கிலோமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடுப்பு காரணமாக பசுபிக் நெருப்பு வலயத்தில் அமைந்துள்ள டெக்டோனிக் தகடுகள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் அதிகளவில் நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக இருக்கிறது.

ஜாவா, சுமாத்திரா தீவுகளில் சுனாமி பாதிப்புகளும் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றது.

Latest news

ஏலத்தில் 6.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையான சுவரில் ஒட்டப்பட்ட ஒற்றை ‘வாழைப்பழம்’

அமெரிக்காவின் நியூயோர்க் ஏல மையத்தில் சுவற்றில் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ...

விக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

"Beyond The Valley" திருவிழாவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி...

சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் Australia Post

தபால் விநியோக சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க Australia Post முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து கடித விநியோக கட்டணத்தை 50 காசுகள் வரை...

28 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கர விமான விபத்து

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மூன்று எத்தியோப்பியர்களால் ஒரு விமானம் கடத்தப்பட்டு நவம்பர் 23ம் திகதியுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. நவம்பர் 23, 1996 இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்...

28 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கர விமான விபத்து

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மூன்று எத்தியோப்பியர்களால் ஒரு விமானம் கடத்தப்பட்டு நவம்பர் 23ம் திகதியுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. நவம்பர் 23, 1996 இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்...

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...