பிரிஸ்பேன், சிட்னி, கன்பரா மற்றும் மெல்பேர்ன் மற்றும் இடையில் உள்ள பிராந்திய பகுதிகள் நீண்ட கால திட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உத்தேச கிழக்கு கடற்கரை திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடலோரப் பகுதியில் நியூகேஸில் இருந்து சிட்னி செல்லும் பாதையை தீர்மானிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ஹாக்ஸ்பரி நதி மற்றும் பிரிஸ்பேன் வாட்டரில் இரண்டு துளையிடும் கருவிகள் வைக்கப்பட்டு, 140 மீட்டர் ஆழத்தில் 6 துளைகளை துளைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிட்னியில் இருந்து நியூகேஸில் வரையிலான பகுதியில் சுமார் 27 துளைகள் தோண்டப்பட உள்ளதாகவும், இதற்கு ஆஸ்திரேலிய அரசின் அதிவேக ரயில் ஆணையம் ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதற்கட்ட திட்டமிடலுக்கு 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால அதிவேக ரயில் திட்டத்தின் முடிவில் முக்கிய நகரங்கள் மற்றும் பிராந்திய பகுதிகள் ஊடாக மணிக்கு 250 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பயணிகள் பயணிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.