அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் எவ்வாறு குடியுரிமையை பெற்றுக்கொண்டார்கள் என்பதை காட்டும் தரவுகள் அடங்கிய அறிக்கையை உள்நாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தரவுகளின்படி, 2018-19 நிதியாண்டில் 2716 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுள்ளனர் மற்றும் 2019-20 நிதியாண்டில் 2609 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் முறையே 2237 மற்றும் 2801 இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
அறிக்கையின் தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டில் மட்டும் 4482 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது.
2023-24 நிதியாண்டில் அவுஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் குடியுரிமை பெற்றுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை சுமார் 5672 பேர் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற அதிக எண்ணிக்கையிலான குடியேற்றவாசிகளைக் கொண்ட நாடுகளில், 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் இலங்கை 11வது இடத்தைப் பெற்றுள்ளது.
2020-21 ஆம் ஆண்டில், இலங்கை 18 வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் 2021-22 நிதியாண்டில், இலங்கை மீண்டும் 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அந்த தரவரிசையில், 2022-23 நிதியாண்டில் முதல் 10 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்திருந்ததுடன், 2023-24 நிதியாண்டில், பட்டியலில் இலங்கை 8வது இடத்திற்கு முன்னேறியிருப்பது சிறப்பம்சமாகும்.