Newsஜனவரி முதல் முகத்தை மூடி பொது இடங்களுக்கு செல்ல தடை

ஜனவரி முதல் முகத்தை மூடி பொது இடங்களுக்கு செல்ல தடை

-

சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நடைமுறை சில நிபந்தனைகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியை மீறினால் ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அதே வேளையில் விமானங்களுக்குள், தூதரக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம், ஆனால், மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத போது, முகத்தை மூடிக்கொள்ளவும் முன் அனுமதி பெற்று வரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை

ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார் , இது காசாவில் அமைதிக்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று கூறியுள்ளார். "பாலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து...

ADHD உள்ள குழந்தைகளின் சுகாதார விளைவுகள் குறித்து புதிய ஆராய்ச்சி

சில குழந்தைகளில் Attention Deficit Hyperactivity Disorder (ADHD) அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து டீக்கின் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு...

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றுகள் ஏற்படும் அபாயம்

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் தொற்று ஏற்படும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகம்...

உலகை விமானத்தில் சுற்றி வந்த இளைய ஆஸ்திரேலிய மனிதர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இளம் விமானி, உலகம் முழுவதும் விமானத்தில் பறந்த இளைய நபராக மாறத் தயாராகி வருகிறார். பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயது Byron Waller...