Cinemaமூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

-

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் டெல்லி கணேஷ்.

ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனித்துவ பாணியைப் பின்பற்றிச் சாதித்தவர்.

டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.

டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார்.

தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ்.

Latest news

5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கிடைத்த The Booker Prize

பிரித்தானிய எழுத்தாளர் Samantha Harvey 2024ஆம் ஆண்டுக்கான The Booker Prize-ஐ வென்றுள்ளார். இது அவரது "Orbital" நாவலுக்காக புக்கர் இலக்கிய விருது பெற்ற முதல் விண்வெளி...

எலோன் மஸ்க்குக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பணியை வழங்கியுள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்குக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பணியை வழங்கியுள்ளார். "மாநில செயல்திறன்...

4 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு விண்கல் மழை

வருடாந்திர லியோனிட் விண்கல் மழையை அடுத்த வாரம் ஆஸ்திரேலியர்கள் காண வாய்ப்பு உள்ளது. இந்த விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தின் ஊடாக மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில்...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள வருடாந்திர ஊதிய வளர்ச்சி விகிதம்

ஆஸ்திரேலியாவின் வருடாந்திர ஊதிய வளர்ச்சி செப்டம்பர் மாதத்திற்குள் 3.5% ஆக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. 2023 ஜூன் காலாண்டில், இந்த எண்ணிக்கை 4 சதவீதமாக...

4 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு விண்கல் மழை

வருடாந்திர லியோனிட் விண்கல் மழையை அடுத்த வாரம் ஆஸ்திரேலியர்கள் காண வாய்ப்பு உள்ளது. இந்த விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தின் ஊடாக மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில்...

செவிலியர்களின் வேலை நிறுத்தத்தால் ஆஸ்திரேலிய மாநிலத்தில் நிறுத்தப்பட்ட அறுவை சிகிச்சைகள்

செவிலியர் வேலைநிறுத்தம் காரணமாக நியூ சவுத் வேல்ஸில் உள்ள மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட பல அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளின் 24 மணி நேர...