Newsரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

ரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

-

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன.

இந்நிலையில், கத்தார் நாடும் ஜேர்மனியும் தங்கள் ஆற்றல் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான, ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் வகையில், இரண்டு நாட்டு அலுவலர்களும் இணைந்து செயலாற்ற இருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை ஏரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கத்தார், ரஷ்ய இறக்குமதிகளிலிருந்து வேறு பக்கம் திரும்பும் ஜேர்மனியின் திட்டத்தில் மையப்பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.

Latest news

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி அடைவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சித்தியடைந்த மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை...

இலங்கை கைதிகள் பலரை விடுவிக்க தயாராக உள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு

சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களை விடுதலை செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது நிறைவேற்று ஆணையின் மூலம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காரணமாகும். அவர்கள் வெவ்வேறு சிறைகளில்...

ஆஸ்திரேலியாவில் தகுதிகள் இருந்தபோதிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர்

அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் உயர் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கைகள், நாட்டில் திறமையான...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு – IPL 2024

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின்...