வெப்பமான காலநிலை மற்றும் இனவிருத்தி காலம் காரணமாக பாம்புகள் வெளியேறி வருவதாக விக்டோரியா மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் பாம்பு பிடிப்பதற்காக அதிக அறிவிப்புகளைப் பெறுவதாகவும் அவர் தனது பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இனவிருத்தி காலத்தில் பாம்புகள் வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான சூரிய ஒளியுடன் கூடிய காலநிலை பாம்புகளின் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரவுக்கு பின் திறந்த வெளியில் பாம்புகள் நடமாடுவதால் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள பாம்புகளை பாதுகாப்பாக அகற்ற விரும்பினால், அவர்கள் தொழில்முறை பாம்பு பிடிப்பவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.