தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.
இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில், பருவநிலை மாற்றத்துடன் கடல் வெப்பமயமாதலால் பவளப்பாறைகள் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன.
சாலமன் தீவில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் காலர் ரீஃப் பல நூற்றாண்டுகளாக கடல் நிலைமைகள் பற்றிய தகவல்களின் வாழும் நூலகம் என்று அழைக்கிறார்கள்.