Newsவெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

-

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் [40 வயது] செயல்பட்டு வருகிறார். இராணுவ கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும் வட கொரியா கடந்த 2006 ஆம் ஆண்டு தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்தது.

தென் கொரியா உடனான எல்லை பிரச்சனை, அந்நாட்டுக்கு உதவி செய்யும் அமெரிக்காவை எதிர்ப்பது என செயல்பட்டு வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக மிரட்டலும் விடுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும்வட கொரியா இராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.

தென் கொரியா தாராளவாதத்தைப் பின்பற்றும் நாடாக உள்ள நிலையில் வட கொரியா கடுமையான சட்டங்களையும், அதிக சமூக கட்டுப்பாட்டையும் மக்கள் மீது கொண்ட நாடாக விளங்குகிறது. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாழ்வாதாரம், சமூக நிகழ்வுகள் என என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு அதிக தணிக்கை விதிமுறைகளும் வட கொரியாவில் உள்ளது.

மக்கள் சுதந்திரமாக இல்லை என சர்வதேச சமூகத்தில் பொதுவான கண்ணோட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத கட்டமைப்புகள் மற்றும் இடங்களின் புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் தென் கொரியாவிலிருந்த காணும் தூரத்தில் உள்ள Gijungdong கிராமம், Liaoning மாகாணத்தில் Dandong பகுதியிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள Sinuiju பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் சுறா தாக்குதலில் இருந்து உயிர்த்தப்பிய Surfer

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் Surfing செய்து கொண்டிருந்த ஒருவர், ஒரு பெரிய வெள்ளை சுறாவால் தாக்கப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பித்த அரிய தருணம்...

குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் நிறைவடைந்த ஸ்கேன் பிரச்சனைகள் குறித்த மதிப்பாய்வு

குயின்ஸ்லாந்தில் உள்ள Caboolture மருத்துவமனையின் சிறப்பு வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ ஸ்கேன்களின் மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் சிகிச்சை பெறாத 38 நோயாளிகளை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

அடுத்த ஆண்டு முதல் பல வகையான வீட்டு மற்றும் பொது பிளாஸ்டிக்குகளை தடை செய்ய நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசால் செயல்படுத்தப்படும்...

சிட்னியில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநருக்கு அபராதம்

சிட்னியில் ஒரு இளம் பெண் சட்டவிரோதமானது என்று தனக்குத் தெரியாத ஒரு செயலுக்காக அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். 22 வயதுடைய அந்தப் பெண் தனது காருடன் இணைக்கப்பட்ட...